Last Updated:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், செமி கண்டக்டர் ஆலைகளை தமிழ்நாடு மற்றும் தெலங்கானாவிலிருந்து குஜராத்திற்கு மாற்றியதற்கு பிரதமர் மோடியை குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடியின் ஒரு தலைபட்சமான செயலால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய செமி கண்டக்டர் ஆலை, குஜராத்திற்கு மாற்றப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அண்மையில் மோடி அரசு 4 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு ஒப்புதல் அளித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், பிரபல முன்னணி நிறுவனம் ஒன்று காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் தொழில் தொடங்குவதற்கு திட்ட அறிக்கை சமர்பித்த நிலையில், அது வலுக்கட்டாயமாக பாஜக கூட்டணி அரசு ஆளும் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தெலங்கானாவில் அமைய இருந்த 2 செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை குஜராத்திற்கு மாற்றப்பட்டதாக ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, தமிழ்நாட்டில் அமைய இருந்த செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையும் குஜராத்திற்கு மாற்றப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் மாநிலங்களுக்கு இடையிலான போட்டி இந்தியாவை வலுப்படுத்தும் என்று கூறும் பிரதமர் மோடி, நடுநிலையாக இல்லாதது போட்டியை கேலிக்கூத்தாகி விடும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
August 14, 2025 3:36 PM IST
செமி கண்டக்டர் ஆலை குஜராத்திற்கு மாற்றம்.. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!


