Last Updated:
இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் மூன்று இரட்டை சதம் 19 சதம் மற்றும் 35 அரை சதங்களை விளாசியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பேட்ஸ்மேன் புஜாரா அறிவித்துள்ளார் 103 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள புஜாரா 7195 ரன்கள் குவித்திருந்தார்
இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் மூன்று இரட்டை சதம் 19 சதம் மற்றும் 35 அரை சதங்களை விளாசியுள்ளார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து புஜாரா ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2018-2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில், இந்திய அணி முதல் முறையாகத் தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். அந்தத் தொடரில் 3 சதங்கள் உட்பட, 521 ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டு, தேசிய கீதம் பாடி, களத்தில் நான் இறங்கிய ஒவ்வொரு முறையும் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன். அந்த தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஆனால், நல்ல விஷயங்கள் அனைத்தும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று சொல்வதுபோல், மிகுந்த நன்றியுடன் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
August 24, 2025 12:33 PM IST


