சிங்கப்பூர் பெண் ஒருவரை தவறான தொழிலுக்காக துபாய்க்கு கடத்திச் சென்றதாக ஒரு வெளிநாட்டு ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கத்தாரில் தாம் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் போல காட்டிக் கொண்ட அந்த ஆடவர், டிண்டர் வாயிலாக அந்த பெண்ணை சந்தித்துள்ளார்.
சக ஊழியரிடம் அத்துமீறிய ஊழியர் – 26 மாத சிறை, 6 பிரம்படி விதிப்பு
அந்த பெண்ணை கத்தாரில் வைத்து திருமணம் செய்து கொள்வதாகவும் போலியாக நடித்து அவர் ஏமாற்றியுள்ளார்.
ஆனால் அந்தப் பெண்ணை துபாய்க்கு கடத்திச்சென்று பாலி*ல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி, அதனால் வந்த வருமானத்தையும் அவர் பெற்றுள்ளார்.
இதனால் அந்த பெண்ணுக்கு பாலி*ல் தொழில் தொடர்பான நோய் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஆகஸ்ட் 22 அன்று கடத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 31 வயதான அக்ரஃப் அர்ஜௌய் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இவர் இத்தாலியை சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல். 2021 மார்ச் மாதம் அவர் சிங்கப்பூருக்கு வந்தார், அதன் பிறகு டின்டரில் அந்தப் பெண்ணைச் சந்தித்தார்.
பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் மாதம், இவர்கள் இருவரும் துபாய் வழியாக கத்தாருக்குப் புறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
துபாய் இறங்கியதும் அவர்கள் அங்கேயே தங்கியதாகவும், அங்கு வைத்து பெண்ணை தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் Mothership தளம் கூறியுள்ளது.
மூன்று லாரிகள், கனரக வாகனம், பிரைம் மூவர் மோதல்: ஊழியர், ஓட்டுநர் மருத்துவமனையில்…

