சர்வதேச நீதி கோரி ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து ‘நீதியின் ஓலம்’ கையெழுத்துப் போராட்டம் நேற்று (23) யாழ். செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.
தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தியே இந்த ‘நீதியின் ஓலம்’ எனும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தப் போராட்டம் மாணவி கிருசாந்தி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணிப் பகுதியில் அணையா விளக்கு போராட்ட தூபி அமைந்துள்ள இடத்தில் முன்னெடுக்கப்பட்டது. (a)


