• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி கருத்து | vice president candidate Sudarshan Reddy talks about indian democracy

GenevaTimes by GenevaTimes
August 23, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி கருத்து | vice president candidate Sudarshan Reddy talks about indian democracy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி / சென்னை: “தற்போது இந்திய ஜனநாயகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருவது போலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது” என்று இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றியபோது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவேன். அந்த வேட்கையின் காரணமாகவே தற்போது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறேன். ஆகவே, இந்தப் பயணம் எனக்கு புதிது கிடையாது.

பொருளாதார நிலையில் பற்றாக்குறை குறித்து பல தரப்பினரும் விவாதிக்கும் வேளையில், இப்போது இந்திய ஜனநாயகத்தில் இத்தகைய பிரச்சினை எழுந்திருக்கிறது. அதாவது, நமது நாட்டின் ஜனநாயகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருகிறது. இதுபோலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இண்டியா கூட்டணி சார்பில் நானும் போட்டியிடுகிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இது எங்கள் இருவருக்கும் இடையிலான போட்டி கிடையாது. மாறாக, இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி இது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ்காரர். ஆனால், நான் எந்த சித்தாந்தத்தையும் பின்பற்றவில்லை என்றாலும், நான் ஒரு ஜனநாயகவாதி. அதன் அடிப்படையில்தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுப்பப்படுகின்றன. ‘நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது ஒருவகையான போராட்டம்’ என்று மறைந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றார்.

அமித் ஷாவுக்கு பதில்: மேலும், “ஒரு வழக்கில் நான் நக்சல் தீவிரவாதத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் நான் எந்தக் கருத்தையும் பதிவு செய்ய விரும்பவில்லை. அந்தத் தீர்ப்பு என்பது என்னுடைய தீர்ப்பு கிடையாது. அது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. மொத்தம் 40 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் முழு விவரங்களையும் அமைச்சர் அமித் ஷா படித்து பார்க்க வேண்டுகிறேன்” என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.

அமித் கூறியது என்ன?: பி.சுதர்சன் ரெட்டி கடந்த 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அப்போது சத்தீஸ்கரில் நக்சலைட்களை ஒடுக்க பழங்குடியின இளைஞர்கள் அடங்கிய தனிப்படை உருவாக்கப்பட்டது. இந்தப் படை ‘கோயா கமாண்டோஸ்’, ‘சல்வா ஜுடும்’ என்ற பெயர்களில் அழைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அந்தப்படை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி அதை உடனடியாக கலைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், டெல்லியில் மலையாள மனோரமா குழுமம் நடத்திய கருத்தரங்கு நிகழ்ச்சியின் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நக்சலைட்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர் இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி.

அவர் மட்டும் அந்த தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால், 2020-ம் ஆண்டே நக்சல் தீவிரவாதம் முடிவுக்கு வந்திருக்கும். நக்சல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் சுதர்சன் ரெட்டி. இதனால் கேரளாவிலும் நக்சலைட் தாக்கம் ஏற்பட்டது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

செப்​.9-ம் தேதி தேர்​தல் நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டது. குடியரசுத் துணைத் தலை​வரை மக்​களவை, மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் இணைந்து தேர்வு செய்​வார்​கள். மக்​களவை​யில் தற்​போது 542 எம்​பிக்​கள் உள்​ளனர். ஒரு இடம் காலி​யாக உள்​ளது. அதே​போல் மாநிலங்​களவை​யில் 239 எம்​பிக்​கள் உள்​ளனர். 6 இடங்​கள் காலி​யாக உள்​ளன. இந்​நிலை​யில், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாள​ராக, மகா​ராஷ்டிர மாநில ஆளுந​ரான சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அறிவிக்​கப்​பட்​டார்.

நாடாளு​மன்ற இரு அவை​களி​லும், பாஜக கூட்​ட​ணிக்கு பெரும்​பான்மை உள்ள நிலை​யில், சி.பி.​ரா​தாகிருஷ்ணனை ஒரு​மன​தாக தேர்வு செய்ய வைக்​கும் முயற்​சி​யில் பாஜக தலைமை ஈடு​பட்​டது. இதற்​கிடை​யில், இண்​டியா கூட்​டணி சார்​பில் அரசி​யல் சார்​பற்ற ஒரு​வரை நிறுத்த ஆலோ​சனை நடை​பெற்​று, இறு​தி​யாக ஆந்​தி​ராவைச் சேர்ந்த உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்டி பெயர் அறிவிக்​கப்​பட்​டது. அவரும், இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் முன்​னிலை​யில் தனது வேட்​புமனுவை தாக்​கல் செய்​துள்​ளார். இதைத்​தொடர்ந்​து, அவர் ஒவ்​வொரு மாநில​மாக சென்று இண்​டியா கூட்​டணி தலை​வர்​களை சந்​தித்து ஆதரவு திரட்டி வரு​கிறார்.

அந்த வகை​யில், நாளை ஆக.24-ம் தேதி ஞாயிற்​றுக்​கிழமை சென்னை வரு​கிறார். முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை சந்​தித்து பேசும் அவர், பின்​னர் திமுக கூட்டணி​யில் உள்ள காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கட்​சி, விசிக, மதி​முக உள்​ளிட்ட கட்​சிகளின் தலை​வர்​களை சந்​தித்து பேசுகிறார். மேலும், கூட்​டணி கட்​சித் தலை​வர்​களுக்​கும் அவர் விருந்​தளிக்​கிறார். இதற்​கான ஏற்​பாடு​கள்​ சென்​னை​யில்​ மேற்​கொள்​ளப்​பட்​டு வருகின்​றன.



Read More

Previous Post

காசாவில் தொடரும் இஸ்ரேலின் கோர தாக்குதல் – 30 பேர் பலி

Next Post

ஜெட்டாவில் நடைபெறும் OIC அவசரக் கூட்டத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தோக் மாட் பங்கேற்கிறார்

Next Post
ஜெட்டாவில் நடைபெறும் OIC அவசரக் கூட்டத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தோக் மாட் பங்கேற்கிறார்

ஜெட்டாவில் நடைபெறும் OIC அவசரக் கூட்டத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தோக் மாட் பங்கேற்கிறார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin