• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தர்மஸ்தலாவில் புகார் அளித்தவரே கைது! – 100 பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறியது பொய்யா? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 23, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
தர்மஸ்தலாவில் புகார் அளித்தவரே கைது! – 100 பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறியது பொய்யா? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 23, 2025 12:59 PM IST

கைது செய்யப்பட்டவர் மண்டியா மாவட்டம் சிக்கபெல்லியை சேர்ந்தவர் என்பதும் அவர் பெயர் சின்னையா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Rapid Read

கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயில் பகுதியில் 100 பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாக புகார் அளித்தவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைக்கப்பட்டதாக கோயில் முன்னாள் ஊழியர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து 20 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை கர்நாடக அரசு அமைத்தது. அந்தக் குழுவினர் முன்னிலையில் முன்னாள் ஊழியர் சுட்டிக்காட்டிய நேத்ராவதி ஆற்றங்கரையில் 16 இடங்களில் தோண்டும் பணி நடைபெற்றது.

அதில், சில குழிகளில் பெண்களின் எலும்புக் கூடுகளும், சேலையும் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், பொய் புகார் அளித்தவரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர். அவரிடம் நேற்று நாள் முழுவதும் நடத்திய விசாரணையில், அவர் பொய் புகார் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டதாக சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் பிரணவ் மோஹன்தி குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மண்டியா மாவட்டம் சிக்கபெல்லியை சேர்ந்தவர் என்பதும் அவர் பெயர் சின்னையா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பல்வேறு எலும்புக் கூடுகள் மற்றும் சடலங்களுடன் சின்னையா புகார் அளித்திருந்த நிலையில், அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன, இதன் பின்னணியில் இருப்பது யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, இந்த வழக்கில் தர்மஸ்தலா சென்ற தனது மகள் அனன்யா பட் காணாமல் போனது குறித்து பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் அவரது தாய் என்று கூறப்படும் சுஜாதா பட் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் தான் பொய் கூறியதாகவும், தனக்கு அப்படியொரு மகளே இல்லை என்றும் சுஜாதா பட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது “எனக்கு அனன்யா பட் என்ற மகள் இருந்தாள் என்பது பொய். நான் அப்படிச் சொன்ன ஒரு சூழ்நிலை இருந்தது. கிரிஷ் மட்டன்னா மற்றும் ஜெயந்த் டி போன்றவர்கள் அப்படிச் சொல்லச் சொன்னார்கள். அனன்யா பட் என்ற மகள் இருப்பது பற்றிய முழு விஷயமும் போலியானது” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

August 23, 2025 12:59 PM IST

Read More

Previous Post

10 கோடி ரூபாய் பணம், போதைப்பொருளுடன் இருவர் கைது

Next Post

India China Ties: இந்தியாவோடு திடீர் நெருக்கம் சீனாவை நம்பலாமா? | Decode

Next Post
India China Ties: இந்தியாவோடு திடீர் நெருக்கம் சீனாவை நம்பலாமா? | Decode

India China Ties: இந்தியாவோடு திடீர் நெருக்கம் சீனாவை நம்பலாமா? | Decode

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin