சிங்கப்பூரில் தனது சக ஊழியரிடம் அத்துமீறி நடந்துகொண்ட 42 வயதுமிக்க ஊழியருக்கு 26 மாத சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
மேலும், மனநல சிகிச்சை பெறுவதற்காக வேண்டி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக S$766.56 செலுத்தவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
மூன்று லாரிகள், கனரக வாகனம், பிரைம் மூவர் மோதல்: ஊழியர், ஓட்டுநர் மருத்துவமனையில்…
பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண வழிவகுக்கும் என்பதால் குற்றவாளியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
கடந்த ஆண்டு இரவு நேரத்தில் இருவரும் பணியில் ஒன்றாக இருந்தனர், அப்போது பெண்ணின் அனுமதியின்றி பின்னால் இருந்து அவர் கட்டிப்பிடித்தார் என கூறப்படுகிறது.
மேலும், ஊழியர் அந்தப் பெண்ணைத் தனது மடியில் உட்கார வைத்து, பின்னால் இருந்து கட்டிப்பிடித்து, மானபங்கம் செய்தார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தும் அவர் அதை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார் என கூறப்பட்டுள்ளது.
பின்னர் கழிப்பறைக்கு சென்ற பெண், அங்கிருந்து கொண்டு உதவி வேண்டி அவரின் நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.
இறுதியாக, 2024 பிப்ரவரி 13, அன்று பிற்பகல் அந்த பெண் இது குறித்து காவல்துறையில் புகார் செய்தார்.
இதனை அடுத்து ஊழியர் மறுநாள் கைது செய்யப்பட்டார்.
இந்திய ஊழியர் 2வது ரகசிய திருமணம்.. சிங்கப்பூர் TO நாகூர் – போலீசில் சிக்கிய கதை

