Last Updated:
Shubhanshu Shukla: விண்வெளி நாயகன் சுபான்சூ சுக்லா டெல்லி திரும்பியபோது உற்சாக வரவேற்பு. ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இந்தியர். 18 நாட்கள் ஆய்வுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பினார்.
டெல்லி திரும்பிய விண்வெளி நாயகன் சுபான்சூ சுக்லாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய விமானப்படை குரூப் கேப்டனான சுபான்சூ சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் சென்றடைந்தார். இதன்மூலம், விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 18 நாட்கள் ஆய்வுக்குப் பிறகு, கடந்த மாதம் 15ஆம் தேதி பூமிக்குத் திரும்பிய அவர், விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று புறப்பட்டார்.
டெல்லி விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வந்தடைந்த சுபான்சூ சுக்லாவுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் நாராயணன், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்துக்கு வெளியே பொதுமக்கள் பெருமளவில் குவிந்து, தேசியக் கொடியை ஏந்தியும், மேளதாளங்களை முழங்கியும் உற்சாகமடைந்தனர்.
Delhi,Delhi,Delhi
August 17, 2025 9:32 AM IST
Shubhanshu Shukla : நாடு திரும்பினார் ‘விண்வெளி நாயகன்’ சுபான்சூ சுக்லா… டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு


