• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது – பின்னணி என்ன? | Former Sri Lankan President Ranil Wickremesinghe arrested

GenevaTimes by GenevaTimes
August 22, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது – பின்னணி என்ன? | Former Sri Lankan President Ranil Wickremesinghe arrested
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச 2022 ஜூலை மாதம் பதவி விலகினார். அவரது எஞ்சிய பதவிக் காலத்தில் ரணில் அதிபராகப் பொறுப்பேற்றார். 2024 செப்டம்பர் வரை அவர் அதிபராக பதவி வகித்தார். இவர் 5 முறை இலங்கை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், ரணில் அதிபராக இருந்தபோது, தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்துக்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப் புலனாய்வு துறை (சிஐடி) போலீஸார் அவரை நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ரணில் விக்ரம சிங்கே கடந்த 2023 செப்டம்பரில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கேவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்றார். இதற்கு பொது நிதியை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நாங்கள் அவரை கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம்” என்று தெரிவித்தனர்.

கியூபா தலைநகர் ஹவானாவில் கடந்த 2023-ல் நடைபெற்ற ஜி77 உச்சி மாநாட்டில் ரணில் கலந்துகொண்டார். அவர் இலங்கை திரும்பும் வழியில் இங்கிலாந்து சென்றார். லண்டனில் தங்கிய அவர் தனது மனைவி மைத்ரியுடன் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். இந்நிலையில், தனது மனைவியின் பயணச் செலவுகளை தானே ஏற்றுக்கொண்டதாகவும், அரசு நிதியைப் பயன்படுத்தவில்லை என்றும் ரணில் கூறிவந்தார். எனினும், ரணில் தனிப்பட்ட பயணத்துக்காக அரசுப் பணத்தை பயன்படுத்தியதாகவும், அவரது மெய்க்காவலர்களுக்கும் அரசே பணம் கொடுத்துள்ளதாகவும் சிஐடி குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது ரணில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

இரு பத்திரிகையாளா்கள் மீதான கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்

Next Post

லோரி ஓட்டுநர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திய அமெரிக்கா | Makkal Osai

Next Post
லோரி ஓட்டுநர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திய அமெரிக்கா | Makkal Osai

லோரி ஓட்டுநர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திய அமெரிக்கா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin