Last Updated:
DK Shivakumar | சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பாராட்டிப் பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், டி.கே. சிவக்குமாரின் செயல் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
கர்நாடக சட்டசபையில் அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் ஆர்.எஸ்.எஸ்., கீதம் பாடியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டது.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலுக்கு காங்கிரஸ் அரசே பொறுப்பு என்று பாஜக-வினர் பேசினர். இதற்கு மறுப்புத் தெரிவித்த துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கீதத்தைப் பாடினார்.
சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பாராட்டிப் பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், டி.கே. சிவக்குமாரின் செயல் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
Bangalore,Karnataka
August 22, 2025 1:00 PM IST
சட்டபேரவையில் ஆர்.எஸ்.எஸ் கீதம் பாடிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்… கர்நாடகவில் புதிய சர்ச்சை


