தெம்பனீஸ் விரைவுச்சாலையில் (TPE) கனரக வாகனம், பிரைம் மூவர் மற்றும் மூன்று லாரிகள் மோதிய விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து இன்று (ஆகஸ்ட் 22) காலை 9.40 மணிக்கு காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ஊழியர் 2வது ரகசிய திருமணம்.. சிங்கப்பூர் TO நாகூர் – போலீசில் சிக்கிய கதை
விபத்தில் சிக்கிய 34 வயதுடைய லாரியில் பயணித்த ஊழியர், 33 வயதுடைய பிரைம் மூவர் ஓட்டுநரும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அச்சமயம் அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் நான்கு பேருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதாக SCDF கூறியது, அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டதாகவும் அது தெரிவித்தது.
இது தொடர்பான விசாரணையில் 33 வயது மற்றும் 36 வயதுமிக்க இரு லாரி ஓட்டுநர்கள் உதவுகிறார்கள் என்று காவல்துறை தெரிவித்தனர்.

