இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேயும் இப்போது சுழன்று அடிக்கும் ஒரு வார்த்தை, ‘கச்சா எண்ணெய்’.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா.
ஆனால், இந்தியா இந்த இறக்குமதியை நிறுத்துவதாக இல்லை.
தற்போது கூட, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். நேற்று புதினை சந்தித்து இருக்கிறார்.
இரு நாடுகளும் எண்ணெய் ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்தப்போவதில்லை என்று பேசியுள்ளன.

“கச்சா எண்ணெய் விலையில் மாற்றங்கள் இருக்கலாம்.
நேற்று ரஷ்யா இந்தியாவைப் பற்றி மிகவும் பாசிட்டிவாக பேசியுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ரஷ்யா பயணத்தில், ‘இந்தியா, ரஷ்யா இடையே நடக்கும் வர்த்தகம் தடைப்படாது. யார் என்ன சொன்னாலும் கேட்கப்போவதில்லை” என்பதைப் போல, சொல்லாமல் சொல்லியிருக்கின்றனர் இந்தியாவும், ரஷ்யாவும்.
இந்தியா ரஷ்யாவின் எண்ணெயைத் தொடர்ந்து வாங்கும் என்பதும், ரஷ்யா தொடர்ந்து எண்ணெயை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் என்பதும் நேற்று உறுதியாகி உள்ளது.
இந்த விஷயங்கள் கச்சா எண்ணெய் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

