பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்த பழமையான கைபர் (Khyber Temple) என அழைக்கப்படும் இந்து மதக்கோயில் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் லாண்டி பகுதியில் அமைந்திருந்த கைபர் கோயிலை இடித்து வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அரசின் மீது லாண்டி பகுதியின் பழங்குடியின பத்திரிகையாளர் இப்ராஹிம் ஷின்வாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கைபர் மாவட்டத்தில் உள்ள லாண்டி கோட்டல் பஜாரின் எல்லைப் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. 1947-ம் ஆண்டுக்கு பின்னர் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்தியாவிலும் பிற பகுதிகளிலு குடியேறியதை தொடர்ந்து கைபர் கோயிலின் பராமரிப்பு பணிகள் கைவிடப்பட்டதால் கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது. கட்டிடம் சிதிலமடைந்ததால் அதனை இடித்து வணிக வளாகம் கட்டும் திட்டம் பாகிஸ்தான் நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்டது.
இதையும் படிக்க :
ரூ.4,30,000.. மகனின் Play School பில்லை இணையத்தில் பகிர்ந்த தந்தை.. உறைந்து போன நெட்டிசன்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயிலை இடிக்கும் பணி தொடங்கிய நிலையில் இப்ராஹிம் ஷின்வாரி தனது குற்றச்சாட்டை முன்வைத்தார். குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ்தான் நிர்வாகம் தங்களுக்கு அது பழமையான கைபர் கோயில் என்பது தெரியாது எனவும் அந்த பகுதியின் அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பணிகள் தொடங்கப்பட்டது எனவும் விளக்கமளித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஷின்வார், “மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறியதால் கைபர் கோயில் கைவிடப்பட்டதாகவும் ஆனால் அங்கு கோயில் இருப்பது அனைவருக்கும் தெரியும். நான் சிறு வயது முதலே அந்த கோயில் குறித்த கதைகளை கேட்டுள்ளேன். பாகிஸ்தான் நிர்வாகம் தங்களுக்கு தெரியாது எனக் கூறுவது அப்பட்டமான பொய். இதற்கு தேவையான விளக்கத்தை அளிக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
