• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா? | south africa australia to play in second ODI today

GenevaTimes by GenevaTimes
August 22, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா? | south africa australia to play in second ODI today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெக்கே: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்கே நகரில் இன்று நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றன. கெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த ஆட்​டத்​தில் 297 ரன்​கள் இலக்கை துரத்​திய ஆஸ்​திரேலிய அணி​யானது கேசவ் மகராஜின் சுழலில் சிக்கி 198 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து தோல்​வியை சந்​தித்து இருந்​தது. இந்​நிலை​யில் 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் இரு அணி​களும் இன்று மோதுகின்​றன. 10 காலை 10 மணிக்கு குயின்​ஸ்லாந்​தின் மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரலை செய்​கிறது.

இன்​றைய ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​தால் ஆஸ்​திரேலிய அணி தொடரை இழக்க நேரிடும். அந்த அணி கடைசி​யாக விளை​யாடிய 7 ஒரு​நாள் போட்​டிகளில் 6-ல் தோல்வி​களை சந்​தித்​துள்​ளது. இதில் இருந்து மீண்டு வரு​வதற்​கான வழிகளை மிட்​செல் மார்ஷ் தலை​மையி​லான ஆஸ்​திரேலிய அணி கண்​டறியக்​கூடும். அதேவேளை​யில் தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றால் ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக தொடர்ச்​சி​யாக 5-வது முறை​யாக தொடரை வெல்​லும்.

கெய்ன்ஸ் நகரில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி​யின் டாப் 6-ல் அனுபவம் வாய்ந்த பேட்​ஸ்​மேன்​கள் இடம் பெற்​றிருந்​தனர். மேலும் உலகக் கோப்பை வென்ற அணி​யில் இடம் பெற்​றிருந்த 2 பந்து வீச்​சாளர்​களும் அங்​கம் வகித்​திருந்​தனர். எனினும் தென் ஆப்​பிரிக்க அணி​யின் சுழற்​பந்து வீச்சை சமாளிக்க முடி​யாமல் ஆஸ்​திரேலிய அணி தோல்வி அடைந்​தது.

தென் ஆப்​பிரிக்க அணி​யும் வீரர்​கள் மாற்​றத்​துக்​கான கட்​டத்​தில் இருந்த போதி​லும் பேட்​டிங்​கில் வலு​வான இலக்கை கொடுத்​தது. டாப் 4 பேட்​ஸ்​மேன்​கள் அற்​புத​மாக செயல்​பட்​டனர். எனினும் மிக​வும் எதிர்​பார்க்​கப்​பட்ட டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், அறி​முக வீர​ரான டெவால்ட் பிரே​விஸ் சிறப்​பாக செயல்​படத் தவறினர். இவர்​கள் இன்​றைய ஆட்​டத்​தில் உயர்​மட்டை திறனை வெளிப்​படுத்த முயற்​சிக்​கக்​கூடும்.

பந்து வீச்​சில் கடந்த ஆட்​டத்​தில் லுங்கி நிகிடி, நத்த்ரே பர்​கர் ஆகியோர் தொடக்க ஓவர்​களில் தாக்​கத்தை ஏற்​படுத்​தாத நிலை​யில் கேசவ் மகராஜ் அபார செயல் திறனை வெளிப்​படுத்தி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தார். இன்​றைய ஆட்​டத்​தி​லும் அவர், ஆஸ்​திரேலியாவின் பேட்​ஸ்​மேன்​களுக்​கு அழுத்​தம்​ ​கொடுக்​கக்​கூடும்​.

1992-ம் ஆண்டுக்கு பிறகு… மெக்கே மைதானத்தில் கடைசியாக 1992-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த சமயத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்த மைதானத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. ஆனால் இந்த ஆட்டம் வெறும் 2 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக கைவிடப்பட்டது.

சுப்ராயன் பந்துவீச்சில் சர்ச்சை: தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான பிரனேலன் சுப்ராயன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலும் களமிறங்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், சுப்ராயனின் பந்துவீசும் பாணி சர்ச்சைக்குரிய முறையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளதுதான். ஆஸ்திரேலிய தொடர் நிறைவடைந்ததும் பிரிஸ்பனில் சுப்ராயனின் பந்து வீச்சு சுயபரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இன்றைய ஆட்டத்தில் சுப்ராயனுக்கு பதிலாக செனுரன் முத்துசாமி சேர்க்கப்படக்கூடும்.



Read More

Previous Post

மகாராஷ்டிராவில் 5ஆம் நாளாக கொட்டித் தீர்த்த கனமழை… வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை! | இந்தியா

Next Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு | Gold price rises by Rs 400 per pound

Next Post
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு | Gold price rises by Rs 400 per pound

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு | Gold price rises by Rs 400 per pound

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin