Last Updated:
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதலில் ஈடுபட்டவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ராஜேஷ் கிம்ஜி என்பது தெரியவந்துள்ளது.
டெல்லியில் கருத்து கேட்பு கூட்டத்தின் போது முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தியது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் இல்லத்தில் முதல்வரின் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக பொதுமக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். முதலமைச்சர் ரேகா குப்தா, அவர்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கூச்சலிட்டவாறு ரேகா குப்தாவை நோக்கி பாய்ந்து அவரின் தலைமுடியைப் பிடித்து சரமாரியாக தாக்கினார்.
மேலும், மோசமான வார்த்தைகளால் வசைபாடியதுடன், கனமான பொருளைக் கொண்டு முதலமைச்சரைத் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதில், ரேகா குப்தாவின் முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.
August 20, 2025 11:55 AM IST


