Last Updated:
ஏர்டெல் மற்றும் Vi அதே சேவைக்கு ₹349 வசூலிக்கின்றன. இதன் மூலம், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு ₹50 சேமிப்பு கிடைக்கிறது.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ (Jio) மற்ற நிறுவனங்களை விட குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக ரீசார்ஜ் ப்ளான்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜியோ, ஏர்டெல், மற்றும் விஐ (Vi) ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒரே மாதிரியான விலைகளில் ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருந்தாலும், அதே விலைக்கு ஜியோ அதிக டேட்டா வழங்குகிறது.
உதாரணமாக, ஒரு நாளைக்கு 1.5 GB டேட்டா வழங்கும் 28 நாள் திட்டத்திற்கு ஜியோ ₹299 வசூலிக்கிறது. ஆனால், ஏர்டெல் மற்றும் Vi அதே சேவைக்கு ₹349 வசூலிக்கின்றன. இதன் மூலம், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு ₹50 சேமிப்பு கிடைக்கிறது.
வருடாந்திர திட்டங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. ₹3,599 விலையுள்ள திட்டத்தில், ஏர்டெல் மற்றும் விஐ 2 GB/நாள் டேட்டாவை வழங்கும்போது, ஜியோ 2.5 GB/நாள் வழங்குகிறது.
₹799 திட்டம்: 84 நாட்களுக்கு 1.5 GB/நாள் டேட்டா வழங்கும் இந்தத் திட்டம், ஃபோன்பே, கூகிள் பே, பேடிஎம் மற்றும் ஜியோவின் இணையதளம் போன்ற தளங்களில் தொடர்ந்து கிடைக்கிறது.
₹249 திட்டம்: இந்தத் திட்டம் இனி ஜியோவின் சில்லறை விற்பனை நிலையங்களில் மட்டுமே கிடைக்கும். ஆன்லைன் ரீசார்ஜ் தளங்களில் கிடைக்காது.
₹209 திட்டம்: இந்தத் திட்டம் மைஜியோ (MyJio) செயலி வழியாக மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.
August 21, 2025 9:27 PM IST


