Last Updated:
இந்திய விளையாட்டு அமைச்சகம் புதிய கொள்கையில், இந்தியா பாகிஸ்தான் இருநாட்டு தொடர்கள் இனி இல்லை என்றும், பொதுவான போட்டிகளில் மட்டும் மோதும் என அறிவித்துள்ளது.
“இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காது என்றும் பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம்” என்றும் இந்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய விளையாட்டுக் கொள்கையை வெளியிட்டுள்ள இந்திய விளையாட்டு அமைச்சகம், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மட்டுமே பங்கேற்கும் இருநாட்டு தொடர்கள் இனி நடைபெறாது என்றும் ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போன்ற பொதுவான தொடர்களில் மட்டுமே பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் நடைபெறும் பொதுவான விளையாட்டுப்போட்டிக்கு பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இந்திய வீரர்கள் அங்கு சென்று பொதுவான விளையாட்டுப்போட்டியில் பங்கேற்பது தொடர்பாக அப்போதைய அரசியல் சூழ்நிலையே தீர்மானிக்கும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒலிம்பிக் கூட்டமைப்பு விதிமுறைக்கு உட்படுவதால் பொதுவான போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் தலையிடமுடியாது எனவும் இந்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Delhi,Delhi,Delhi
August 21, 2025 9:05 PM IST


