ரயில் நிலையங்களில் எலக்ட்ரானிக் மெஷின்கள் மற்றும் ஸ்கேனர்கள் இன்ஸ்டால் செய்யப்படும். ஸ்கேன் செய்தபின்னர், ஒவ்வொரு லக்கேஜுக்கும் டேக் ஒன்று மாட்டப்படும். லக்கேஜை சரிபார்த்த பிறகே பயணிகள் பிளாட்பார்ம்களுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமான லக்கேஜ்களை வைத்திருப்பதற்கு கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டும் அல்லது அந்த குறிப்பிட்ட லக்கேஜை ஒரு பார்சலாக புக்கிங் செய்வது அவசியம். அளவுக்கு அதிகமான லக்கேஜ் என்பது ரயில் பெட்டிகளுக்குள் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதற்கு அபராதங்கள் வசூலிக்கப்படும்.
இந்த இலவச அனுமதி என்பது நீங்கள் ரயிலில் பயணிக்கும் வகுப்பைப் பொறுத்து அமையும்.
ஃபர்ஸ்ட் ஏசி கிளாஸ் – 70 கிலோ
செகண்ட் ஏசி கிளாஸ் – 50 கிலோ
தேர்டு ஏசி மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் – 40 கிலோ
ஜெனரல் கிளாஸ் – 30 கிலோ
ஒவ்வொரு பயணிக்கும் கூடுதலாக 10 கிலோ வரை அனுமதிக்கப்படும். இதைவிட அதிகமாக எடுத்துச் செல்லும்போது அதற்கான அபராதங்களை செலுத்த வேண்டும் அல்லது அந்த லக்கேஜை பார்சலாக புக்கிங் செய்ய வேண்டும்.
இந்த விதிகளானது முதலில் மத்திய வடக்கு ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வேயின்கீழ் இயங்கும் முக்கியமான ரயில் நிலையங்களில் அமல்படுத்தப்படும். இதில் பிரக்யாராஜ் சந்திப்பு, சியோகி, சுபேதர்கன்ஜ், கான்பூர் சென்ட்ரல், மிர்சாபூர், டுன்ட்ளா, அலிகர் சந்திப்பு, கோவிந்துபுரி, லக்னோ சார்பாக், பனாரஸ் மற்றும் எட்டாவா போன்றவை அடங்கும். ரயில் பெட்டிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசலை குறைப்பதற்குமே இந்த விதி அமல்படுத்தப்பட உள்ளது என்பதை அதிகாரிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
மேலும் ஏர்போர்ட் பாணியிலான அனுபவங்களோடு ஒத்துப்போகும் வகையில் முக்கியமான ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் வேலைகளில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது. இதில் ஆடைகள், காலணிகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பயணம் தொடர்புடைய ஆக்சஸரீஸ் விற்பனை செய்யும் பிரீமியம் ரீடைல் கடைகள் திறக்கப்பட உள்ளன.
இந்திய ரயில்வே பிரக்யாராஜ் சந்திப்பில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின்கீழ் 960 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. 9 மாடி முனையத்தில் பரந்த அளவிலான லான்சுகள், அதிவேக Wi-Fi, சோலார் பவர் சிஸ்டங்கள், மழைநீர் சேகரிப்பு திட்டம், டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் ஆட்டோமேட் செய்யப்பட்ட டிக்கெட் இயந்திரங்கள் போன்ற அம்சங்கள் வழங்கப்படும். டிசம்பர் 2026 முதலில் இருந்து முனையத்தில் நுழைவதற்கு தகுதி பெற்ற ரயில் டிக்கெட் பெற்றிருக்க வேண்டும். இது கிட்டத்தட்ட ஒரு போர்டிங் பாஸ் போல செயல்படுகிறது.
August 21, 2025 6:37 PM IST
ஏர்போர்ட் போல மாற இருக்கும் ரயில் நிலையங்கள்… லக்கேஜ் சோதனைகள், லான்ச், பிரீமியம் கடைகள்… இன்னும் நிறைய இருக்கு…!

