இந்தியா ரஷ்யா உடன் வணிகம் செய்கிறது என்று இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்க ட்ரம்ப் அரசாங்கம்.
இதற்கான பதிலடியைத் தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தந்துள்ளார்.
அவர் கூறியதாவது…
“ரஷ்யாவின் எண்ணெயை பெரியளவில் வாங்குவது இந்தியா அல்ல… அது சீனா தான்.
ரஷ்யாவின் எல்.என்.ஜியை அதிகம் வாங்குவது இந்தியா அல்ல… அது ஐரோப்பிய ஒன்றியம் தான்.
2022-ம் ஆண்டுக்கு பிறகு, ரஷ்யா உடனான வணிகத்தை அதிகரித்தது இந்தியா அல்ல… தெற்கில் இருக்கும் ஒரு சில நாடுகள் என்று நினைக்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக, உலக எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தவும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கவும் இந்தியாவை அமெரிக்கா அறிவுறுத்தியது.
இந்தியா அமெரிக்காவிடம் இருந்தும் தான் எண்ணெய் வாங்குகிறது. அதன் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனால், நீங்கள் (ட்ரம்ப், அமெரிக்கா) சொல்லும் லாஜிக் எங்களுக்கு உண்மையாக மிக குழப்பமாக்க இருக்கிறது”.
ரஷ்யாவிற்கு அரசு ரீதியலான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் ஜெய்சங்கர். அங்கே தான் இவர் பேசியுள்ளார்.
ஆனால், அவரது பேச்சில் ட்ரம்ப் பெயரைக் குறிப்பிடவில்லை.

