• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

115 மாதங்களில் முதலீடு இரட்டிப்பு… அற்புதமான தபால் நிலைய சேமிப்புத் திட்டம்…! வட்டி மற்றும் ரிட்டன்கள்… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
115 மாதங்களில் முதலீடு இரட்டிப்பு… அற்புதமான தபால் நிலைய சேமிப்புத் திட்டம்…! வட்டி மற்றும் ரிட்டன்கள்… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 21, 2025 2:52 PM IST

கிசான் விகாஸ் பத்திரம் என்ற திட்டம் 1988ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கிராமப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

Rapid Read
News18News18
News18

இன்றைய நாட்களில் அதிகரித்து வரும் செலவுகளால் சேமிக்க வேண்டும் என்பதற்கான அழுத்தம் தொடர்ந்து மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. இது மாதிரியான சூழ்நிலையில் சாமானிய மக்கள் பாதுகாப்பான, அதே நேரத்தில் தங்களுடைய பணத்தை பல மடங்கு அதிகரித்து தரக்கூடிய முதலீட்டு விருப்பங்களை எதிர்பார்க்கின்றனர் என்பதில் எந்தவொரு ஆச்சரியமும் கிடையாது.

அந்த வகையில் தபால் நிலையத்தில் கிடைக்கும் கிசான் விகாஸ் பத்திரம் என்ற திட்டமானது உங்களுடைய முதலீட்டை இரட்டிப்பாக வழங்குவதற்கு உதவுகிறது. இந்த அரசு திட்டம் மூலமாக முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை 9 வருடங்கள் மற்றும் 7 மாதங்கள், அதாவது 115 மாதங்களில் இரட்டிப்பாக்கலாம்.

கிசான் விகாஸ் பத்திரம் என்றால் என்ன?

கிசான் விகாஸ் பத்திரம் என்ற திட்டம் 1988ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கிராமப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்தத் திட்டத்திற்கு அரசு உத்தரவாதம் கிடைப்பதால் மிகவும் பாதுகாப்பான ஒரு முதலீடாக கருதப்படுகிறது.

முதலீட்டுத் தொகை:

இந்த திட்டத்தில் உங்களால் குறைந்தபட்சமாக 1000 ரூபாயை முதலீடு செய்ய முடியும். மேலும், இதற்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. அதாவது சிறிய முதலீட்டாளர்கள் 1000 ரூபாய் முதலில் இருந்து முதலீடு செய்யலாம். அதே சமயம் பெரிய முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக பலன் பெறலாம்.

வட்டி மற்றும் ரிட்டன்கள்:

தற்போது கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5% வட்டி கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. அதாவது, உங்களுடைய வட்டியானது முதல் தொகையோடு சேர்க்கப்பட்டு, அதற்கான வட்டியானது தொடர்ந்து வழங்கப்பட்டு வரும். இதன் காரணமாகவே உங்களுடைய முதலீடு வெறும் 115 மாதங்களில் இரட்டிப்பாகிறது. உதாரணமாக, நீங்கள் 8,000 ரூபாயை முதலீடு செய்தால் மெச்சூரிட்டியின்போது உங்களுக்கு 16,000 ரூபாய் கிடைக்கும்.

தேவையான ஆவணங்கள்:

  • அடையாள சான்றிதழ்: ஆதார் அட்டை, PAN கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம்
  • முகவரி சான்றிதழ்: ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் அல்லது மின்சார கட்டணம் செலுத்தியதற்கான ரசீது
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வதற்கு PAN கார்டு கட்டாயமாக தேவை.
  • 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் சேலரி ஸ்லிப், பேங்க் ஸ்டேட்மென்ட் அல்லது ITR போன்ற வருமான நிரூபணத்தை வழங்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?

முதலீடு செய்வதற்கு ஒருவர் அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது பதிவு செய்யப்பட்ட வங்கி கிளையில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை (படிவம் A) பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த படிவத்தில் பெயர், முகவரி, மொபைல் நம்பர், முதலீட்டுத் தொகை, பேமென்ட் செலுத்தும் வழி மற்றும் நாமினி தகவல்கள் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். KYC ஆவணங்களையும் ஒருவர் சமர்ப்பிக்க வேண்டும். 50,000 ரூபாய் வரை உங்களால் கேஷாக டெபாசிட் செய்ய முடியும். இதைவிட அதிகமான தொகையை முதலீடு செய்வதற்கு செக், டிமாண்ட் டிராஃப்ட் அல்லது RTGS, NEFT போன்ற ஆன்லைன் வழிகளைப் பயன்படுத்தலாம். சரிபார்க்கும் முறை நிறைவு செய்யப்பட்டதும் உங்களுக்கு கிசான் விகாஸ் பத்திரம் சான்றிதழ் வழங்கப்படும். இதனை நீங்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 21, 2025 2:20 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

115 மாதங்களில் முதலீடு இரட்டிப்பு… அற்புதமான தபால் நிலைய சேமிப்புத் திட்டம்…! வட்டி மற்றும் ரிட்டன்கள்…

Read More

Previous Post

இந்தியா ஏ அணியில் விளையாடுகிறாரா ரோஹித் சர்மா? தீயாய் பரவிய தகவலின் உண்மை என்ன? | விளையாட்டு

Next Post

அமெரிக்கா-இந்தியா வரி விவகாரத்தில் நிக்கி ஹேலி கருத்து

Next Post
அமெரிக்கா-இந்தியா வரி விவகாரத்தில் நிக்கி ஹேலி கருத்து

அமெரிக்கா-இந்தியா வரி விவகாரத்தில் நிக்கி ஹேலி கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin