Last Updated:
சமீபத்தில் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு அவர் எந்த சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை.
இந்தியா ஏ அணியில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். அதைத் தொடர்ந்து இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
2027 இல் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இருவரும் தயாராகி வருவதாக பேசப்படுகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள சர்வதேச ஒருநாள் தொடருக்கு முன்னதாக, இந்தியா ஏ அணிக்காக விளையாட ஆர்வம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், செப்டம்பர் 30 முதல் கான்பூரில் நடக்கவுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் தயாராவதற்கு இந்தியா ஏ அணியில் விளையாடுவது நல்ல பயிற்சியாக அமையும் என ரோஹித் ஷர்மா கருதுகிறார். சமீபத்தில் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு அவர் எந்த சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை.
அதனால், சர்வதேச போட்டிகளுக்காக ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படும் முன், ஒருசில போட்டிகளில் விளையாடி, தனது ஆட்டத் திறனை மீண்டும் மேம்படுத்திக்கொள்ள அவர் விரும்புகிறார்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும், ஊடகத் தகவல்கள் படி, ரோஹித் ஷர்மாவின் விருப்பத்தை பிசிசிஐ பரிசீலனை செய்யும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
August 21, 2025 3:19 PM IST


