Last Updated:
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அடுத்த மாதம் 9ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதே போன்று, இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி, டெல்லியில் மாநிலங்களவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பி.சி. மோடியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
Delhi,Delhi,Delhi
August 21, 2025 1:03 PM IST


