யாழ்ப்பாணம் நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
இதனையொட்டி பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதன்பிரகாரம், நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர், பணிப்புரை விடுத்துள்ளார். R

