டெல்லியில் கருத்து கேட்பு கூட்டத்தின்போது முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தியது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
டெல்லி முதலமைச்சர் இல்லத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தின்போது, மக்களின் குறைகளை முதலமைச்சர் ரேகா குப்தா கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த 41 வயது மதிக்கத்தக்க நபர், கூச்சலிட்டவாறு ரேகா குப்தாவை நோக்கி பாய்ந்து அவரின் தலைமுடியைப் பிடித்து சரமாரியாக தாக்கினார். மேலும், மோசமான வார்த்தைகளால் வசைபாடியதுடன், கனமான பொருளைக் கொண்டு முதலமைச்சரை தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதில், ரேகா குப்தாவின் முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட நபரைப் பிடித்த காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ராஜேஷ் கிம்ஜி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய அந்த இளைஞரின் தாய், தனது மகனை மன்னித்து விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், நாய்கள் மீது அன்பு கொண்ட தனது மகன், காப்பகங்களில் தெரு நாய்களை அடைக்கும் மாநகராட்சியின் நடவடிக்கையால் இவ்வாறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “இதுபோன்ற தாக்குதல்கள் எனது மனநிலையையோ அல்லது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது உறுதியையோ ஒருபோதும் உடைக்க முடியாது. இப்போது, முன்பை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் நான் உங்களுடன் இருப்பேன்” என டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று காலை என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என் மீதான தாக்குதல் மட்டுமல்ல. டெல்லிக்கு சேவை செய்யவும், மக்களின் நலனுக்காகவும் பாடுபடவும் நாங்கள் எடுத்த உறுதியின் மீதான ஒரு கோழைத்தனமான முயற்சி.
आज सुबह जनसुनवाई के दौरान मेरे ऊपर हुआ हमला केवल मेरे ऊपर नहीं, बल्कि दिल्ली की सेवा और जनता की भलाई के हमारे संकल्प पर किया गया एक कायराना प्रयास है।
स्वाभाविक है कि इस हमले के बाद मैं सदमे में थी, परन्तु अब बेहतर महसूस कर रही हूँ। मैं अपने सभी शुभचिंतकों से निवेदन करती हूँ कि…
— Rekha Gupta (@gupta_rekha) August 20, 2025
இந்த தாக்குதலுக்குப் பிறகு நான் அதிர்ச்சியில் இருந்தேன். ஆனால், தற்போது நலமாக இருக்கிறேன். விரைவில் நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.
இதுபோன்ற தாக்குதல்கள் எனது மனநிலையையோ அல்லது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது உறுதியையோ ஒருபோதும் உடைக்க முடியாது. இப்போது, முன்பை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் நான் உங்களுடன் இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
August 20, 2025 10:03 PM IST
“இது என் மீதான தாக்குதல் மட்டுமல்ல; நாங்கள் எடுத்த உறுதியின் மீதான ஒரு கோழைத்தனமான முயற்சி” – டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா

