Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை நிறுத்தியதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தியதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இரு நாடுகளிடையே நடந்த சண்டை ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் மோதலை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதை மத்திய அரசு மறுத்தது. இருப்பினும், சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் கூறி வருகிறார்.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) வர்த்தக ரீதியாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளை வழிக்கு கொண்டு வந்து ராணுவ மோதலை டிரம்ப் நிறுத்தியதாக கூறினார்.
August 20, 2025 9:34 AM IST
மீண்டும் கிளம்பிய சர்ச்சை… ‘இந்தியா – பாக்., மோதலை அமெரிக்க அதிபர் நிறுத்தினார்’ – வெள்ளை மாளிகை


