• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி 7 மடங்கு அதிகரிப்பு | Indian exports to the US increase 7 fold

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி 7 மடங்கு அதிகரிப்பு | Indian exports to the US increase 7 fold
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: அமெரிக்கா​வுக்​கான இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி 7 மடங்கு வரை அதி​கரித்து வரு​கிறது. உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான புதிய வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இதன்​படி இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​பட்டு உள்​ளது. முதல் ​கட்​ட​மாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்​தது.

மேலும் 25 சதவீத வரி விதிப்பு வரும் 27-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறி​வித்​துள்​ளது. ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் இந்​திய பொருட்​களுக்கு கூடு​தலாக 25 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்​கம் அளித்​துள்​ளார். இந்த சூழலில் அமெரிக்​கா​வின் கூடு​தல் வரி விதிப்பு அமலுக்கு வரு​வதற்கு முன்​பாக அந்த நாட்​டுக்கு அனுப்​பப்​படும் இந்​திய பொருட்​களின் அளவு சுமார் 7 மடங்கு வரை அதி​கரித்து வரு​கிறது.

இதுகுறித்து பொருளா​தார நிபுணர்​கள் கூறிய​தாவது: கடந்த ஆண்டு ஏப்​ரல்- ஜூலை மாதங்​களில் அமெரிக்கா​வுக்​கான இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி 27.6 பில்​லியன் டால​ராக இருந்​தது. நடப்​பாண்டு ஏப்​ரல் முதல் ஜூலை வரையி​லான காலத்​தில் இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி 33.5 பில்​லியன் டால​ராக உள்​ளது. கடந்த ஆண்டை ஒப்​பிடும்​போது தற்​போது 21.4 சதவீதம் வரை ஏற்​றுமதி அதி​கரித்​திருக்​கிறது.

கூடு​தல் வரி விதிப்பு அமலுக்கு வரு​வதற்கு முன்​பாக இந்​திய ஏற்​றும​தி​யாளர்​கள் அதிக பொருட்​களை அமெரிக்கா​வுக்கு அனுப்பி வரு​கின்​றனர். இதன்​காரண​மாக இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி சுமார் 7 மடங்கு வரை அதி​கரித்து வரு​கிறது. இவ்​வாறு பொருளா​தார நிபுணர்​கள் தெரி​வித்​தனர். இந்​திய ஆடை ஏற்​றும​தி​யாளர்​களின் கூட்​டமைப்​பான ஏஇபிசி தலை​வர் சுதிர் சேக்ரி கூறும்​போது, “வரி விகிதம் தொடர்​பாக இந்​தி​யா, அமெரிக்கா இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது.

இதன் ஒரு பகு​தி​யாக அமெரிக்க குழு​வினர் ஆகஸ்ட் 25-ம் தேதி டெல்​லிக்கு வரு​வ​தாக திட்​ட​மிடப்​பட்டு இருந்​தது. தற்​போதைய சூழலில் அமெரிக்க குழு​வின் டெல்லி பயணம் ஒத்தி வைக்​கப்பட்டு உள்​ளது. எனினும் அடுத்த சில வாரங்​களில் இரு நாடு​கள் இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்பட வாய்ப்​பிருக்​கிறது” என்று தெரி​வித்​தார். இந்​திய வைர வியா​பாரி​கள் கூறும்​போது, “அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படும் இந்​திய வைரங்​கள் மற்​றும் தங்க நகைகள் சுமார் 28 சதவீதம் வரை அதி​கரித்​திருக்​கிறது” என்​று தெரிவித்​தனர்​.



Read More

Previous Post

சின்க்ஃபீல்ட் கோப்பை: குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா | Praggnanandha defeated Gukesh

Next Post

நகரும் 113 ஆண்டுகள் பழமையான தேவாலயம் – குவியும் மக்கள்

Next Post
நகரும் 113 ஆண்டுகள் பழமையான தேவாலயம் – குவியும் மக்கள்

நகரும் 113 ஆண்டுகள் பழமையான தேவாலயம் - குவியும் மக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin