• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சின்க்ஃபீல்ட் கோப்பை: குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா | Praggnanandha defeated Gukesh

GenevaTimes by GenevaTimes
August 20, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சின்க்ஃபீல்ட் கோப்பை: குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா | Praggnanandha defeated Gukesh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செயின்ட் லூயிஸ்: சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.

பிரக்​ஞானந்​தா, உலக சாம்​பிய​னான சகநாட்​டைச் சேர்ந்த டி.கு​கேஷுடன் மோதி​னார். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய பிரக்​ஞானந்தா 36-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். இந்த வெற்​றி​யின் மூலம் பிரக்​ஞானந்​தா, நேரலை உலக தரவரிசை​யில் 3-வது இடத்​துக்கு முன்​னேறி​னார். அமெரிக்​கா​வின் லேவோன் அரோனியன், உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக் அப்​துசத்​தோரோவை 41-வது நகர்த்​தலின் போது தோற்​கடித்​தார்.

இந்திய கிரிக்கெட் மகளிர் அணி அறிவிப்பு: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்​டம்​பர் 30 முதல் நவம்​பர் 2வரை இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற உள்​ளது. இந்த தொடருக்​கான இந்​திய மகளிர் அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் தொடக்க வீராங்​க​னை​யான ஷபாலி வர்மா நீக்​கப்​பட்​டுள்​ளார். காயத்​தில் இருந்து மீண்​டுள்ள வேகப்​பந்து வீச்சு வீராங்​கனை ரேணுகா சிங் தாக்​குர் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​திய அணி விவரம்: ஹர்​மன்ப்​ரீத் கவுர் (கேப்​டன்), ஸ்மிருதி மந்​த​னா, பிர​திகா ராவல், ஹர்​லீன் தியோல், தீப்தி ஷர்​மா, ஜெமிமா ரோட்​ரிக்​ஸ், ரேணுகா சிங் தாக்​குர், அருந்​ததி ரெட்​டி, ரிச்சா கோஷ், கிராந்தி கவுட், அமன்​ஜோத் கவுர், ராதா யாதவ்,  சா​ரணி, யாஷ்டிகா பாட்​டி​யா, ஸ்நே ராணா.

அல்கராஸ், ஸ்வியாடெக் சாம்பியன்: அமெரிக்​கா​வின் சின்​சி​னாட்டி நகரில் சின்​னாட்டி ஓபன் டென்​னிஸ் தொடர் நடை​பெற்​றது. இதன் மகளிர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் 3-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக், 7-ம் நிலை வீராங்​க​னை​யான இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலினியை எதிர்த்து விளை​யாடி​னார்.இதில் இகா ஸ்வி​யாடெக் 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் முதல் நிலை வீர​ரான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸுடன் மோதி​னார். இதில் முதல் செட்​டில் கார்​லோஸ் அல்​க​ராஸ் 5-0 என முன்​னிலை​யில் இருந்த போது உடல் நலக்​குறைவு காரண​மாக ஜன்​னிக் சின்​னர் போட்​டி​யில் இருந்து வில​கி​னார். இதனால் கார்​லோஸ் அல்​க​ராஸ் சாம்​பியன்​ பட்​டம்​ வென்​றார்​.

வெண்கலம் வென்றார் மனு பாகர்: கஜகஸ்​தானின் ஷிம்​கென்ட் நகரில் ஆசிய துப்​பாக்கி சுடு​தல் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் பிரி​வில் ஒலிம்​பிக்​கில் இரு பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் மனு பாகர் 219.7 புள்​ளி​கள் சேர்த்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார். சீனா​வின் கியான்கே மா 243.2 புள்​ளி​களு​டன் தங்​கப் பதக்​க​மும், கொரி​யா​வின் ஜின் யாங் 241.6 புள்​ளி​களு​டன் வெள்​ளிப் பதக்​க​மும்​ வென்​றனர்​.

சென்னையில் இன்று தேசிய சீனியர் தடகளம்: தமிழ்​நாடு தடகளம் சங்​கம் சார்​பில் மாநிலங்​களுக்கு இடையி​லான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி சென்னை நேரு விளை​யாட்​டரங்​கில் இன்று (20-ம் தேதி) தொடங்கி வரும் 24-ம் தேதி வரை நடை​பெறுகிறது. 5 நாட்​கள் நடை​பெறும் இந்த போட்​டி​யில் நாடு முழு​வதும் இருந்து சுமார் 700 வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொள்​கின்​றனர். இவர்​கள் 35 அணி​களில் இடம் பெற்று விளை​யாட உள்​ளனர்.

இந்த தொடரின் வாயி​லாக வரும் செப்​டம்​பர் 13 முதல் 21 வரை ஜப்​பானின்டோக்​கியோ​வில் நடை​பெறும் உலக தடகள சாம்​பியன்​ஷிப் போட்​டிக்​கான இந்​திய அணி தேர்வு செய்​யப்பட உள்​ளது. இந்​தத் தொடரில் குண்டு எறிதல் வீரர் தஜிந்​தர்​பால் சிங், அன்னு ராணி, உயரம் தாண்​டு​தல் வீரர் தேஜஸ்​வின் சங்​கர், கேரளா​வின் டிரிப்​பிள் ஜம்ப் வீரர் அப்​துல்லா அபூபக்​கர், கார்த்​திக் உன்​னிகிருஷ்ணன், முரளி சங்​கர், ஒடி​சா​வின் அனிமேஷ் குஜ்ஜுர், அசாமின் அம்​லான் போர்​கோஹைன் உள்​ளிட்டதேசிய சாதனை படைத்த வீரர்​கள் கலந்​து​கொள்​கின்​றனர். தமிழகத்​தைச் சேர்ந்த டிரிப்​பிள் ஜம்ப் வீரர் பிர​வீன் சித்​ர​வேல், ஓட்​டப்​பந்தய வீராங்​க​னை​கள் வித்யா ராம்​ராஜ், அபினயா ராஜ​ராஜன், ஏஞ்​சல் சில்​வியா உள்​ளிட்​டோரும்​ பங்​கேற்​கின்​றனர்​.



Read More

Previous Post

பிரதமர் டு அமைச்சர் வரை… 30 நாட்கள் சிறை சென்றால் இனி இதுதான் நடக்கும் – கடைசி நாளில் மத்திய அரசின் செக்! | இந்தியா

Next Post

அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி 7 மடங்கு அதிகரிப்பு | Indian exports to the US increase 7 fold

Next Post
அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி 7 மடங்கு அதிகரிப்பு | Indian exports to the US increase 7 fold

அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி 7 மடங்கு அதிகரிப்பு | Indian exports to the US increase 7 fold

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin