இதுகுறித்து ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா கூறியதை தற்போது பார்க்கலாம். “ரயில்வேயில், உதவி லோகோ பைலட் என்பவர், ஆரம்பத்தில் ஒரு சரக்கு ரயிலில் நியமிக்கப்படுகிறார். ஆனால், தொடக்கத்தில் அவருக்கு லோகோ பைலட்டின் முழுப் பொறுப்பும் வழங்கப்படுவதில்லை. எனவே, ஆரம்ப கட்டத்தில், அவர் ஒரு பயணிகள் ரயில் ஓட்டுநரை விட குறைந்த சம்பளத்தைப் பெறுகிறார்.”உதவி லோகோ பைலட், தலைமை லோகோ பைலட்டுக்கு உதவுகிறார். இதில் ரயிலின் வேகம், சிக்னல் மற்றும் பிற பாதுகாப்பு அம்சங்கள் கண்காணிக்கப்படுகின்றன.


