டிஜிபின் பெறும் முறை (How to Get DigiPin): உங்கள் மொபைலில் Location வசதி ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலுள்ள இணையதளத்தை திறக்கவும். உங்கள் இருப்பிடம் அடிப்படையில் ஒரே கிளிக்கில் டிஜிபின் வழங்கப்படும். பின் அதை உங்கள் பார்சல் முகவரியாக அல்லது ஷாப்பிங் முகவரியாக பயன்படுத்தலாம். Amazon, Flipkart போன்ற இகாமர்ஸ் டெலிவரி நிறுவனங்கள் உங்கள் வீட்டை துல்லியமாக கண்டுபிடித்து நேரடியாகபொருட்களை டெலிவரி செய்ய இது பெரிதும் உதவும். குறிப்பாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு, போலீஸ் ஆகிய சேவைகள், உங்கள் இருப்பிடத்தை விரைவாக அடைய இது பயன்படும். மேலும் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் இதன்மூலம் சரியான முகவரி பதிவு செய்ய முடியும்.


