பிரிட்டனில் 12 வயது சிறுவன் ரோவன் தனது செல்லப்பிராணியை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பூமியிலிருந்து அவருக்கு ஒரு அறிய பொக்கிஷம் கிடைத்துள்ளது. அதை அந்த சிறுவன் தனது தாயிடம் கொடுத்துள்ளார். அவரது தாய் அதை எதோ குப்பை என நினைத்து குப்பை தொட்டியில் வீச நினைத்துள்ளார். அப்போதுதான் அது விலைமதிப்பில்லாத பொருள் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
அது சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான ஒரு தங்க வளையல். அதனை சோதனை செய்து பார்த்ததில் அது கி.பி 1 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அந்த சிறுவனின் தாய், “ரோவன் எப்போதுமே பூமியிலிருந்தே ஏதேனும் பொருட்களை கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருப்பான். அவன் அவ்வாறு செய்யும்போது நான் கண்டிப்பேன் இருப்பினும் அவன் அதை தொடர்ந்து செய்துக்கொண்டுதான் இருக்கிறான்” என கூறியுள்ளார்.
நியூயார்க் போஸ்ட் செய்தியின்படி, சிறுவன் வளையலை எடுத்தபோது அது மண்ணால் மூடப்பட்டிருந்தது. ஆனால் சிறுவன் அதை தங்கமாக இருக்கலாம் என நம்பி வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களை சந்தித்த ரோவன், “எனக்கு இது சாதாரன விஷயம். ஏனென்றால் நான் இதுபோல பல பொருட்களை பூமியிலிருந்து எடுத்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கோஹினூர் வைரத்தை முதன்முதலில் யார் வைத்திருந்தது தெரியுமா? சுவாரஸ்ய பின்னணி
துருதுருப்பான 12 வயது சிறுவன் 2,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க பொருகளை கண்டுபிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
