ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. கடைசியாக ஆகஸ்ட் 6-ம் தேதி சவரனுக்கு ரூ.75,000-ஐத் தாண்டியது. தொடர்ந்து, ஆகஸ்ட் 8-ஆம் தேதி ரூ.75,760 என தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன் பின்னர் தங்கம் விலை குறைந்து வந்தது. ஆகஸ்ட் 18ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.9,280க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.74,240க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், 10வது நாளாக இன்றும் தங்கம் விலை இறங்கு முகத்திலேயே இருப்பதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,235க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


