Last Updated:
கனரா வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. இப்போது, இருப்பைப் பொறுத்து 2.55% முதல் 4% வரை வட்டி கிடைக்கும்.
பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கி தனது பிக்சட் டெபாசிட் மற்றும் சேவிங் அக்கவுன்ட்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. கனரா வங்கியின் புதிய விகிதங்கள் ஆகஸ்ட் 7, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய விகிதங்கள் பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இருவருக்கும் பொருந்தும்.
பொது வாடிக்கையாளர்கள் இப்போது ரூ.3 கோடிக்கும் குறைவான கால்லபில் பிக்சட் டெபாசிட்களுக்கு 3.25% முதல் 6.50% வரை வட்டியை பெறுவார்கள். 444 நாட்கள் பிக்சட் டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 6.50% வட்டி கிடைக்கும். கால்லபில் பிக்சட் டெபாசிட்களுக்கு முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி உள்ளது.
ஆனால், மார்ச் 2019 முதல் அமலில் உள்ள விதிகளின்படி, முன்கூட்டியே பணம் எடுப்பது அல்லது பகுதி பணம் எடுப்பது 1% அபராதத்தை விதிக்கும். மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 3.25% முதல் 7% வரை இருக்கும். அவர்கள் 444 நாட்கள் பிக்சட் டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 7% வட்டியைப் பெறுவார்கள்.
ஆகஸ்ட் 6, 2025 அன்று ரிசர்வ் வங்கியின் கொள்கை மதிப்பாய்வுக்குப் பிறகு இந்த மாற்றம் வந்துள்ளது, அதில் ரெப்போ விகிதம் 5.55%ஆக மாற்றப்படாமல் பராமரிக்கப்பட்டது. இந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இது பல வங்கிகள் டெபாசிட் ரேட்களைக் குறைக்க வழிவகுத்தது.
கனரா வங்கியும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. இப்போது, இருப்பைப் பொறுத்து 2.55% முதல் 4% வரை வட்டி கிடைக்கும். முன்பு, இந்த விகிதம் 2.70% முதல் 4% வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பொது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 3.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
- 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 4.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
- 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 4.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
- 180 நாட்கள் முதல் 290 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 5.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
- 270 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் கொண்ட பிக்சட் டெபாசிட்களுக்கு 5.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
- 1 வருடம் மற்றும் அதற்கு மேல் முதல் 1 வருடம் 3 மாதங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 6.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
- 444 நாட்கள் சிறப்பு பிக்சட் டெபாசிட்களுக்கு 6.5 சதவீத வட்டியை வழங்குகிறது.
- 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவான பிக்சட் டெபாசிட்களுக்கு 6.25 சதவீத வட்டியை வழங்குகிறது.
- 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவாக பிக்சட் டெபாசிட்களுக்கு 6.25 சதவீத வட்டியை வழங்குகிறது.
- 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 6.25 சதவீத வட்டியை வழங்குகிறது.
August 18, 2025 7:07 PM IST
கனரா வங்கியில் FD மற்றும் சேமிப்புக் கணக்குகள் உள்ளதா…? மாற்றப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் இவைதான்…!


