உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் பெற்ற தாயே குழந்தையை விபச்சாரத்தில் ஈடுபட செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் இரண்டு குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் வசித்து வந்தனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளின் தந்தை இறந்த நிலையில் குழந்தைகள் இருவரும் தாத்தா பாட்டியுடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் குழந்தைகள் அவர்களது தாய் மற்றும் அவரது ஆண் நண்பருடன் இணைந்து வசித்து வந்தனர்.
தாய் விபச்சார தொழில் செய்து வந்த நிலையில் அவருடைய 10 வயது மகளையும் அதில் ஈடுபடுத்த முயற்சித்துள்ளார். அந்த 10 வயது பெண் குழந்தை பலமுறை அவளது தாயின் ஆண் நண்பர் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவளது சகோதரனும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் அவன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
தாயின் ஆண் நண்பரின் விருப்பத்திற்கு இணங்காததாலும் விபச்சாரத்திற்கு செல்ல மறுத்ததாலும் தாயே அந்த சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். பல மாதங்களாக வலியை அனுபவித்து வந்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். அவரை மீட்ட டெல்லி காவல்துறை அவரை குழந்தைகள் நல ஆணையத்தின் பராமரிப்பில் அனுப்பி வைத்தனர்.
காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த சிறுமி, தான் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் தன் தாயே அதற்கு உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தாயையும் அவரது ஆண் நண்பரையும் கைது செய்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை மகள் கடந்த ஜனவரி மாதமே காணாமல் போன நிலையில் தற்போது வரை தாய் மகளை காணவில்லை என எங்கும் புகாரளிக்கவில்லை என தெரிவித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
