Last Updated:
விக்கெட் கீப்பரை பொறுத்த அளவில் ரிஷப் பந்த் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் விளையாட வாய்ப்புகள் குறைவு.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் முகமது சிராஜ் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. மொத்தம் 8 ஆசிய நாடுகள் இந்த தொடரில் உரையாடுகின்றன. டி20 ஃபார்மேட் அடிப்படையில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. 8 அணிகளும் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி நாளை இறுதி செய்யப்படுகிறது. இதற்காக நாளை பிசிசிஐ தேர்வு குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கௌதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்வால் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். சமீபத்திய தகவல் அடிப்படையில் இந்த தொடரில் முகமது சிராஜ் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிகின்றன. விக்கெட் கீப்பரை பொறுத்த அளவில் ரிஷப் பந்த் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் விளையாட வாய்ப்புகள் குறைவு.
அவருக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மா களம் இறங்கலாம். அவர்களுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இவர்களுடன் ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, கேப்டன் சூர்யா குமார் யாதவ் உள்ளிட்டோர் அணியில் இடம் பெறலாம்.
பவுலிங் வரிசையை பொறுத்த அளவில் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒய்வு அளிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், கடைசி நேரத்தில் பும்ராவும் இடம் பிடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
August 18, 2025 2:39 PM IST


