• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Putin: 3 மணி நேர பேச்சுவார்த்தை: புதினின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப்! – போர் முடிவுக்கு வருமா?

GenevaTimes by GenevaTimes
August 17, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Putin: 3 மணி நேர பேச்சுவார்த்தை: புதினின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப்! – போர் முடிவுக்கு வருமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் 22 சதவிகித பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியிருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் – ரஷ்யாப் போரை நிறுத்த முயற்சி செய்து வருகிறார். அதற்காக ரஷ்ய அதிபர் புதினுடன் 4 முறை ட்ரம்ப் ஆலோசனை செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, நேற்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்​கா, ரஷ்ய அதிபர்​கள் நேரடியாக சந்தித்து உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

புதின் - ட்ரம்ப்
புதின் – ட்ரம்ப்

விமான தளத்தில் ரஷ்ய அதிபர் புதினை கைதட்டி வரவேற்ற ட்ரம்ப், புதினுடன் சுமார் 3 மணி நேரம் உரையாற்றினார். அதன்​பிறகு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ரஷ்ய அதிபர் புதின், “உக்​ரைன் எங்​களு​டைய சகோதர நாடாகவே கருதுகிறோம். இரு நாடு​களின் வேர்​களும் ஒன்​று. ஆனால் ரஷ்​யா​வின் பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​ட​தால் போர் மூண்​டது. இது எங்​களுக்கு மிகுந்த வேதனை அளிக்​கிறது. இன்​றைய பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக இருந்​தது. உக்ரைனில் அமைதி திரும்ப புதிய பாதை திறந்​திருக்​கிறது.

ஆனால், உக்ரைனும் ஐரோப்​பிய நாடு​களும் சேர்ந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்​டும். இன்​றைய தின பேச்சுவார்த்தையின் மூலம் ரஷ்​யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒத்​துழைப்பை அதி​கரிக்க வாய்ப்பு இருக்​கிறது. இதன்​மூலம் உக்​ரைன் பிரச்​சினை​களுக்கு தீர்வு காண முடி​யும். அதோடு அமெரிக்​கா, ரஷ்யா இடையி​லான உறவும் மேம்​படும். உக்​ரைன் பிரச்சினைக்கு விரை​வில் தீர்வு காணப்பட வேண்டும்” என்றார்.

புதின் - ட்ரம்ப்
புதின் – ட்ரம்ப்

அதைத் தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இன்​றைய பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக இருந்​தது. நல்ல முன்னேற்றத்தை உணர முடிந்தது. ஆனால், எந்த ஒப்பந்தமும் இதுவரை கையெழுத்தாகவில்லை. உக்ரைன் விவகாரத்தை முடித்துவைக்க ஜெலன்ஸ்கியுடனும் நேட்டோ அமைப்பு தலைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அதற்கான முயற்சிகளை நான் முன்னெடுக்கிறேன். எனக்கும் புதினுக்குமான நட்பு இன்னும் நீடிக்கிறது. ரஷ்யா குறித்து பரப்பப்படும் எதிர்மறையான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளே. உக்ரைன் போரை நாங்கள் நிறுத்துவோம்.” என்றார்.

உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி ஆகஸ்ட் 18-ம் தேதி (நாளை) அமெரிக்க தலைநகர் வாஷிங்​டன் செல்​கிறார். அப்​போது அதிபர்​ ​ட்ரம்​பை சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியான தகவலில், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளைக் கொண்ட ஒரு பகுதியான டான்பாஸை விட்டு உக்ரைன் இராணுவம் வெளியேற வேண்டும்.

புதின் - ட்ரம்ப்
புதின் – ட்ரம்ப்

அதற்கு பதிலாக, தெற்கு உக்ரைனில் உள்ள கருங்கடல் துறைமுகப் பகுதியான கெர்சன் மற்றும் சபோரிஷியாவில் ரஷ்யப் படைகள் தங்கள் தாக்குதலை நிறுத்தும் என புதின் கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அதிபர் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்ததாகவும், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Ukraine War: “இந்தியா, சீனா, பிரேசில் மீது தடை விதிக்கப்படும்” – எச்சரிக்கும் நேட்டோ!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Previous Post

மேக்ஸ்வெல் அதிரடியால் டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி! | maxwell show helps australia to win t20 series versus south africa

Next Post

லாடாங் பைராம் வீட்டுடமையில் விடுபட்ட தொழிலாளர்களின் கதி! – Malaysiakini

Next Post
லாடாங் பைராம் வீட்டுடமையில் விடுபட்ட தொழிலாளர்களின் கதி! – Malaysiakini

லாடாங் பைராம் வீட்டுடமையில் விடுபட்ட தொழிலாளர்களின் கதி! – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin