Last Updated:
விண்வெளி வீரர் சுபான்சூ சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பி ஞாயிற்றுக்கிழமை இந்தியா வருகிறார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, உத்தரப்பிரதேசம் செல்ல உள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய விண்வெளி வீரர் சுபான்சூ சுக்லா, ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்புகிறார்.
இந்திய விமானப்படை குரூப் கேப்டனான சுபான்சூ சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் சென்றடைந்தார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அவர், கடந்த மாதம் 15ஆம் தேதிக்கு பூமிக்கு திரும்பினார். அமெரிக்காவில் மீட்பு மையத்தில் தங்கவைக்கப்பட்ட அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து, விமானம் மூலம் இந்தியாவுக்கு சனிக்கிழமை புறப்பட்டார். சுமார் ஓராண்டுக்குப் பிறகு, டெல்லிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடையும் அவரை வரவேற்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தனது இந்தியப் பயணம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சுபான்சூ சுக்லா, இந்தியாவுக்கு திரும்புவது உணர்வுப்பூர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டு காலத்தில் நண்பர்களுடன் இருந்தது அற்புதமான தருணம் என்றும், தாயகம் திரும்ப உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
August 16, 2025 7:05 PM IST
நாளை இந்தியா திரும்புகிறார் விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா… வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!


