SINGAPORE: சாங்கி விமான நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 25 வயது இந்தியர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த சம்பவம் ஜூலை 16, அன்று பிற்பகல் 1.41 மணியளவில் நடந்தது.
சாங்கி விமான நிலைய முனையம் 3 இல் உள்ள ட்ரான்சிட் பகுதியில் உள்ள கடையில் திருட்டு நடந்ததாக காவல்துறை கூறியுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு… புதுக்கோட்டையை சேர்ந்த இருவர் கைது
முதற்கட்ட விசாரணையில், அந்த ஆடவர் கடையில் இருந்து மொத்தம் S$1515 மதிப்புள்ள கைச்செயின் மற்றும் பாக்கெட் ஆர்கனைசர் என்னும் சிறிய பையையும் எடுத்துக்கொண்டு பணம் செலுத்தாமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர் விசாரணைகள் மற்றும் CCTV காட்சிகளை ஆராய்ந்த விமான நிலைய காவல் பிரிவின் அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர்.
புகார் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவர் சிங்கப்பூரிலிருந்து வேறொரு நாட்டுக்கு புறப்பட இருந்த நிலையில் கையும்களவுமாக பிடிபட்டார்.
திருடப்பட்டதாகக் கூறப்படும் பொருட்களும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் மர* தண்டனை விதிக்கப்பட்ட ஆடவருக்கு கருணை மன்னிப்பு வழங்கிய அதிபர்!
Photo: police.gov.sg/website

