உலகின் மிகப்பெரிய அரண்மனை அல்லது வீடு என்றதும் நம்மில் பலரின் நினைவில் வருவது பக்கிங்காம் அரண்மனையே. ஆனால் உங்களுக்கு தெரியுமா இவற்றை விட பெரிய அரண்மனை உள்ளது என்று. அதுவும் இந்தியாவில் உள்ளது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
குஜராத்-ல் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸே உலகின் மிகப்பெரிய அரண்மனை ஆகும். இந்தியாவை முன்னர் ஆட்சி செய்த கெய்க்வாட் வம்சாவளியினரின் அரண்மனையே இந்த லக்ஷ்மி விலாஸ். இது பக்கிங்காம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரியது.
லக்ஷ்மி விலாஸ் அரண்மனை 3,04,92,000 சதுர அடி பரப்பளவிலும், பக்கிங்காம் அரண்மனை 8,28,821 சதுர அடியிலும் அமைந்துள்ளது. உலகின் மிக விலையுயர்ந்த வீடான முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா 48,780 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:
வெளிநாடு பயணம் செய்த இந்தியருக்கு வாழ்த்து…
தற்போது ஊர் மக்களால் அரச மரியாதையுடன் நடத்தப்படும் கெய்க்வாட் பரமபரையின் தற்போதைய வாரிசாக ராதிகாராஜே கெய்க்வாட் உள்ளார். இனி எவரேனும் உலகின் பெரிய அரண்மனை எது எனக் கேட்டாலும் அது இந்தியாவில் உள்ள லக்ஷ்மி விலாஸ் என்பதை மறவாமல் கூறிவிடுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
