Last Updated:
Tirupati independence day | திருப்பதி மலையில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் அலுவலக வாசலில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று நாடு முழுவதும் 79ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நாடு சுதந்திரம் அடைந்ததை கொண்டாடும் விதமாகவும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைவரின் நினைவை போற்றும் வகையிலும் நாடு முழுவதும் தேசிய கொடி ஏற்றி, கீதம் பாடி மரியாதை செலுத்துவார்கள்.
அந்த வகையில் திருப்பதி மலையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருப்பதி திருமலை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரின் சட்டையில் தேசிய கொடியும் குத்தப்பட்டது. இதை தொடர்ந்து கொண்டாட்டத்தில் பங்கேற்ற நபர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
August 15, 2025 1:03 PM IST


