கோலாலம்பூர்,
அட்டார்னி ஜெனரல் (AG) மற்றும் பொது வழக்கறிஞர் பதவிகளுக்கான மறு சீரமைப்புக்கான முன்மொழிவு இந்த மாத இறுதியில் அமைச்சரவை முன்னால் இறுதி செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, MADANI அரசின் சட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். கடந்த இரண்டரை வருட காலத்தில் 23 சட்ட மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் இரண்டு அரசியலமைப்பு திருத்தங்கள், பாராளுமன்ற சேவைகள் சட்டம் 2025, குழந்தை சாட்சியச் சட்ட திருத்தம், கட்டாய மரண தண்டனை நீக்கம், ‘சைபர் குற்றம் சட்டம் 2025’ உள்ளிட்டவை அடங்கும்.
2023-ல் 5 புதிய சட்டங்கள், 34 சட்ட திருத்தங்கள்; 2024-ல் 5 புதிய சட்டங்கள், 57 திருத்தங்கள்; 2025-ல் இதுவரை 4 புதிய சட்டங்கள், 6 திருத்தங்கள் என்பவையும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் அரசியல் கட்சி தாவுதல் தடுப்பு சட்டத்தை வலுப்படுத்துவதில் தாம் எதிர்க்கவிஇல்லை என்றும், முன்னர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலுவான சட்டம் கொண்டு வர தாமே முன்மொழிந்ததாகவும் அன்வார் தெரிவித்தார்.




