Last Updated:
பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுதந்திர தினத்தை ஒட்டி கண்காணிப்பு பணிகள் நடத்தப்படுகின்றன
சுதந்திர தினத்தையொட்டி மும்பையில் பாதுகாப்பு பணிகளுக்காக 14,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாடு முழுவதும் 79 ஆவது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. அனைத்து மாநிலங்களிலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் மூவர்ண கொடி நாளை மறுதினம் பறக்க விடப்பட உள்ளது.
இதனையொட்டி முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுதந்திர தினத்தை ஒட்டி கண்காணிப்பு பணிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் மும்பையில் 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
August 13, 2025 9:34 PM IST
சுதந்திர தினத்தையொட்டி மும்பையில் 14 ஆயிரம் போலீசார் குவிப்பு.. அசம்பாவிதங்களைத் தவிர்க்க நடவடிக்கை..


