• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கடல் உணவு பொருள் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தையை தேட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்ஜன் சிங் வலியுறுத்தல் | Minister Rajiv Ranjan Singh says Seafood exporters should look for new markets

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கடல் உணவு பொருள் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தையை தேட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்ஜன் சிங் வலியுறுத்தல் | Minister Rajiv Ranjan Singh says Seafood exporters should look for new markets
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறி​வித்​துள்ள நிலை​யில், அது இந்​திய கடல் உணவுப் பொருட்​கள் ஏற்​றும​தி​யில் கடும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த நிலை​யில், புதிய சந்​தைகளை தேடு​மாறு ஏற்​றும​தி​யாளர்​களை மத்​திய அரசு வலி​யுறுத்​தி​யுள்​ளது

இதுகுறித்து மத்​திய மீன்​வளம் மற்​றும் கால்​நடை பராமரிப்பு துறை அமைச்​சர் ராஜீவ் ரஞ்​ஜன் சிங், கடல் உணவு ஏற்றுமதியாளர்களு​டன் நடை​பெற்ற சந்​திப்​பின்​போது கூறிய​தாவது: தற்​போதைய சூழலை ஏற்​றும​தி​யாளர்​கள் தைரி​யத்​துடன் எதிர்​கொள்ள வேண்​டும். இந்​திய இறால் மற்​றும் பிற மீன் வகைகளுக்கு உலகள​வில் நல்ல வரவேற்பு உள்​ளது. இதனால், ஏராளமான மாற்று சந்தை வாய்ப்​பு​கள் உள்​ளன.

இதனை கருத்​தில் கொண்டு புதிய சந்​தைகளை கைப்​பற்​று​வ​தில் ஏற்றுமதியாளர்​கள் தீவிர​மாக செயல்பட வேண்​டும். இவ்​வாறு ராஜீவ் கூறி​னார். அமெரிக்கா​வுக்​கான பதப்​படுத்​தப்​பட்ட இறால் ஏற்​றும​தி​யில் இந்​தியா தற்​போது முன்​னிலை​யில் உள்​ளது. இதன் சந்​தைப் பங்கு 2015-ல் 24.4%-ஆக இருந்த நிலை​யில் 2024 -ல் 40.6% -ஆக கணிச​மாக அதி​கரித்​துள்​ளது.

இந்​தநிலை​யில், அமெரிக்​கா​வின் அதிக வரி விதிப்​பின் காரண​மாக இந்​தி​யா​வின் சந்​தைப் பங்கு கடுமை​யாக பாதிக்​கப்​படும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது. இதனால், இந்​திய ஏற்​றும​தி​யாளர்​கள் மாற்று சந்​தைகளை தேட வேண்​டிய நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளனர். இந்​தி​யா​வின் சந்தை வரம்பை விரிவுபடுத்​து​வதற்​கான ஒரு உத்​தியை வகுக்க ஏற்​றும​தி​யாளர்​களு​டன் மத்​திய அரசு பேச்​சு​வார்த்தை​யில் ஈடு​பட்​டுள்​ளது.

மாற்று சந்​தைகளாக இங்​கிலாந்​து, ஐரோப்​பிய ஒன்​றி​யம், ஓமன், ஐக்​கிய அரபு அமீரகம், தென் கொரி​யா, ரஷ்​யா, சீனா ஆகியவை அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இதற்​காக, மதிப்​புக் கூட்​டல், பதப்​படுத்​துதல், பேக்​கேஜிங் வசதி​களை மேம்படுத்தவும், வலுப்​படுத்​த​வும் மீன்வள உட்​கட்​டமைப்பு நிதியை பயன்​படுத்​திக் கொள்​ளு​மாறு ஏற்​றும​தி​யாளர்​களை மத்​திய அரசு கேட்​டுக்​கொண்​டுள்​ளது.

இந்​தி​யா​வின் வரு​டாந்​திர மீன் உற்​பத்தி 104% என்ற உயர் வளர்ச்​சியை எட்​டி​யுள்​ளது. 2013-14-ல் 96 லட்​சம் டன்​னாக இருந்த மீன் உற்பத்தி 2024-25-ல் 195 லட்​சம் டன்​னாக அதி​கரித்​துள்​ளது. 2023-24 நிதி​யாண்​டில் ரூ.60,524 கோடி மதிப்​புள்ள 17.81 லட்​சம் மெட்​ரிக்டன் கடல் உணவு​களை இந்​தியா ஏற்​றுமதி செய்​துள்​ளது.



Read More

Previous Post

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்.. 18ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை! | இந்தியா

Next Post

சீனப் பொருட்கள் மீதான 145% வரி விதிப்பு மேலும் 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு | Trump announced suspension of 145% tariffs on Chinese goods for another 90 days

Next Post
சீனப் பொருட்கள் மீதான 145% வரி விதிப்பு மேலும் 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு | Trump announced suspension of 145% tariffs on Chinese goods for another 90 days

சீனப் பொருட்கள் மீதான 145% வரி விதிப்பு மேலும் 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு | Trump announced suspension of 145% tariffs on Chinese goods for another 90 days

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin