Last Updated:
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வுசெய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் 18ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வுசெய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், வரும் 18ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வுசெய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்குதல் வரும் 21-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளரை தேர்வுசெய்ய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு கூட்டணி தலைவர்கள் அதிகாரம் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஓரிரு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியா கூட்டணி சார்பிலும் வேட்பாளரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டணித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, வேட்பாளரை தேர்வுசெய்ய வரும் 18-ஆம் தேதி கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
August 13, 2025 7:19 AM IST


