Last Updated:
இந்த வளர்ச்சி இணையற்ற டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதில் ஜியோவின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக உள்ளது.
ரிலையன்ஸின் ஜியோ மொபைல் நெட் வொர்க் சேவையை தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2.38 கோடியை தாண்டியுள்ளது.
மொபைல் தகவல் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸின் ஜியோ நெட்வொர்க் இந்தியாவில் மற்ற எந்த நிறுவனங்களும் வழங்காத சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் ஜியோ நெட்வொர்க்கிற்கு நாள்தோறும் புதிய சந்தாதாரர்கள் அதிகரித்து வருகின்றனர்.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் சேவை வழங்கி வருகிறது. இது 4G/5G மொபைல் சேவைகள், நிலையான வயர்லெஸ் பிராட்பேண்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகிறது.
தேசிய அளவில், ஜியோ டிஜிட்டல் புரட்சியில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. வயர்லெஸ் தொலைத்தொடர்பு துறையில் 1.91 மில்லியன் புதிய மொபைல் சந்தாதாரர்கள் ஜியோ நெட்வொர்க்கில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் சேவையை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட், குறிப்பிடத்தக்க சந்தாதாரர் வளர்ச்சியுடன் தமிழ்நாட்டில் தனது தொடர்ச்சியான ஆதிக்கத்தை இன்று அறிவித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) சமீபத்திய தொலைத்தொடர்பு சந்தா தரவுகளின்படி, ஜியோ ஏப்ரல் மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் மாநிலத்தில் 28.57 லட்சத்திற்கும் அதிகமான புதிய மொபைல் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் ஜியோவின் மொத்த மொபைல் பயனர்கள் எண்ணிக்கை 2.38 கோடிக்கும் அதிகமானதை எட்டியுள்ளது. இதன் சந்தைப் பங்கு 32.66% ஆகும்.
August 12, 2025 12:33 PM IST
தமிழ்நாட்டில் மட்டும் 2.38 கோடி சந்தாதாரர்கள்.. டெலிகாம் துறையில் உச்சம் தொடும் ரிலையன்ஸின் ஜியோ


