அமெரிக்க மண்ணில் இருந்து பாகிஸ்தான் ராணுவ தலைவர் அசிம் முனீரின் இந்த அச்சுறுத்தல் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அசிம் முனீரின் இந்த பேச்சானது அணு ஆயுதங்களை கொண்ட பொறுப்பற்ற நாடு பாகிஸ்தான் என்பதை காட்டுகின்றது என்று விமர்சித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது.
தேசிய பாதுகாப்பை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுப்போம் என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது. இந்த கருத்துக்கள் நட்பு ரீதியான மூன்றாவது நாட்டின் மண்ணில் இருந்து கூறப்பட்டு இருப்பது வருந்தத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளது.

