சூரிய குடும்பத்தில் அதிக துணைக்கோள்களை கொண்டுள்ள பெரிய கோளான வியாழனின் ஒரு துணைக்கோளான யூரோபாவில் வரும் அக்டோபர் மாதம் கிளிப்பர் விண்கலம் செலுத்தப்படவுள்ளதாக நாசா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அதன் திட்ட இயக்குநர்கள் கிளிப்பர் மற்றும் யூரோபா குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளனர். இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்விக்கு பதிலை தேடி இந்த திட்டம் நாசாவால் தொடங்கப்பட்டுள்ளதாக கிளிப்பர் திட்ட இயக்குநர் பாப் பப்பர்லாடோ கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒருவேளை யூரோபாவில் உயிரினங்கள் வாழ்வது கண்டறியப்பட்டால் இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழும் பட்டியலில் பூமியுனன் யூரோபாவும் இணையும் என அவர் ஆர்வமுடன் தெரிவித்தார். மேலும் திட்டத்தின் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் பணிகள் நிறைவுற்று அக்டோபரில் கிளிப்பர் விண்ணில் செலுத்தப்படும் எனவும் கூறினார்.
கிளிப்பர் வைக்கப்பட்டிருக்கும் அறையில் சிலரை தவிர மற்ற எவரும் அனுமதிக்கப்படுவதில்லை எனக் கூறிய அவர் அதற்கான காரணத்தையும் விளக்கினார். பூமியில் இருந்து எந்த நுண்ணுயிரும் அங்கு எடுத்து செல்லப்பட கூடாது என்பதற்காகவே இத்தகைய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். யூரோபாவிற்குள் கிளிப்பரை செலுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை எனவும் இதற்காக பல தடைகளை கடக்க வேண்டியுள்ளது எனவும் பாப் பப்பர்லாடோ கூறினார்.
கிளிப்பர் திட்டமேலாளர் ஜோர்டான் எவன்ஸ் கூறுகையில், “கிளிப்பர் விண்கலம் முதலில் வியாழன் மற்றும் யூரோபாவின் கோட்டில் பயணிக்க வேண்டும். யூரோபாவில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை பழுதடைய செய்யாமல் இருக்க வேண்டும். யூரோபாவினுள் நுழையும் கிளிப்பர் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டிகளை ஊடுருவி செல்வதோடு அவற்றை ஆய்வு செய்து முடிவுகளை அனுப்ப வேண்டும். அனுப்பும் முடிவுகள் எந்த சிக்கலும் இன்றி பூமியை வந்தடையெ வேண்டும்.” என கூறினார்.
இதையும் படிக்க:
மக்களே உஷார்… குழந்தைகளின் உயிரை பறிக்கும் கக்குவான் இருமல் !
இவ்வாறு பல தடைகளை தாண்டி யூரோபாவில் உயிர்கள் வாழ்கின்றனவா, அவை வாழ்வதற்கு ஏற்ற சூழல்கள் உள்ளனவா என்பதை ஆராய்ந்து அனுப்பினால் மட்டுமே நாம் விரைவில் அங்கு சென்று வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து அங்கு குடியேற்றங்களை அமைக்க முடியும் என இருவரும் ஒருசேர தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
