Last Updated:
துருக்கியின் பலிகேசிர் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 12 வீடுகள் இடிந்து விழுந்தன.
துருக்கியின் வடமேற்கில் உள்ள பலிகேசிர் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிந்திர்கி என்ற இடத்தில் 11 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த நிலநடுக்கத்தால், சுமார் 12 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய 6 பேர் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
முன்னதாக ரஷ்யாவின் குரில் தீவுகள் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதும், இது ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவாகியிருந்தது. மேலும் இந்த நிலநடுக்கம் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததும், கடலில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில நாட்களாகவே ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிந்த நிலையில் தற்போது இன்று துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
August 11, 2025 12:02 PM IST
துருக்கியில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்.. 12 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்.. மீட்பு பணிகள் தீவிரம்!


