வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள பேரணிக்கு தில்லி காவல்துறையினரிடம் அனுமதி கோரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு வாக்குத் திருட்டு நடைபெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சான்றுகளுடன் கடந்த வாரம் குற்றச்சாட்டை எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, வாக்குத் திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த 300 எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு இன்று பேரணி செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

