Last Updated:
பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, முதலமைச்சர் சித்தராமையாவுடன் பயணம் செய்தார். மேலும், 3 வந்தே பாரத் ரயில் சேவைகளையும் தொடங்கி வைத்தார்.
பெங்களூருவில் புதிதாக மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் சித்தராமையாவுடன் ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவைகள் ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெங்களூருவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.வி.சாலை முதல் பொம்மசந்த்ரா வரை 19 கிலோமீட்டர் தூர மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, ஆர்.வி. சாலை முதல் எலெக்ட்ரானிக் சிட்டி வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அவருடன் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரும் பயணம் மேற்கொண்டனர்.
முன்னதாக, பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர், பெங்களூரு – பெலகாவி, அமிர்தசரஸ் – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் – புனே ஆகிய வழித்தடங்களில் 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
Bangalore [Bangalore],Bangalore,Karnataka
August 10, 2025 2:29 PM IST
பெங்களூருவில் புதிய மெட்ரோ சேவை : தொடங்கி வைத்து சித்தராமையாவுடன் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி!


