இன்று நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ் இந்திக குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
நாடாளவிய ரீதியில் 2,787 நிலையங்களில் இவ்வாண்டு பரீட்சை நடைபெற்றதாகவும், 307,951 பேர் பரீட்சைக்குத் தோற்றியதாக இந்திக குமாரி லியனகே ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

